google1

Tuesday, August 9, 2011

லண்டன் கலவரம் மேலும் 3 நகரங்களுக்கு பரவியது

பிரிட்டன் தலைநகர் லண்டனில் தொடரும் கலவரம் நேற்று மேலும் 3 நகரங்களுக்கு பரவியது. இதையடுத்து, இத்தாலியில் விடுமுறையை அனுபவித்து வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உடனடியாக நாடு திரும்பினார். பாராளுமன்றத்தை அவசரமாக மேலும்படிக்க

1 comment:

  1. பிரித்தானிய அரசகுடும்பத்தைப் பார்த்து பண்பாட்டை வளர்க்கின்ற நாகரீக சீமான்களும் சீமாட்டிகளும், நேரெதிரான காட்சிகளை காணும்வண்ணம் தன்னைச் சுற்றி ஒரு அராஜக சூழலை உருவாக்கி வைத்திருந்துள்ளார்கள் . பணக்காரர்கள் மட்டும் வாழமுடியும் என்று நம்பிவாழும் பிரித்தானிய பணக்கார சமூகம், ஏழைகளின் அராஜகத்தை பற்றி ஒருபோதும் எண்ணிக்ககூட பார்த்திருக்கமாட்டார்கள். தம்மைச்சுற்றி நாகரீகசேரிகளை உருவாக்கி வைத்திருப்பது, தமது பணக்காரத்தனமான வாழ்வுக்கு கல்லறைகள் என்று கனவுகூட கண்டிருக்கமாட்டார்கள்.
    மகாராணியை தலையில் தூக்கிவைத்திருக்கும் பெரியபிரித்தானிய சமூகஅமைப்பில் வாழவழியற்றுப் போன இளைஞர்சமூகத்தின் அராஜகம்தான், இன்று அதனை நிலைகுலைய வைத்துள்ளது. இன, நிற, மத ரீதியாக ஓடுக்கப்பட்டு, சமூகத்தில் மிகமிக ஏழைகளானபிரிவுகள் படிப்படியாக ஒதுக்கப்பட பிரதேசத்தில் வாழ்வதுதான் பிரித்தானிய சமூகஅமைப்பின் நவீனசேரிகளாகின்றது.
    பிரித்தானிய மேட்டுக்குடி சமூகத்தின் திட்டமிட்ட ஓதுக்கும் கொள்கையால் இந்த நவீனசேரிகளில் வாழ்பவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது கிடையாது. பிரித்தானியாவின் பண்பாடு; இன, நிற, மத வாதம் போன்றன, நவீனசேரிகளில் வாழ்பவர்களை தனிமைப்படுத்துகின்றது. பணக்காரர்கள் பில்லியன் கணக்கில் பணத்தை மேலும் குவிக்க, தொடர்ச்சியாக நடைமுறைக்கு வரும் சமூகநலவெட்டுக்கள், நவீனசேரிகளின் ஏழ்மையை மேலும் பலமடங்காக்குவாதன் விளைவுதான் இங்கிலாந்தில் இன்று தொடரும் வரைமுறையற்ற அராஜகமும் சூறையாடலும்.

    நல்லையா தயாபரன்

    ReplyDelete