google1

Friday, February 10, 2012

நான் வெளியேறுகையில்… - இஸுரு சாமர சோமவீர

நான் வெளியேறுகையில்
என்னைத் தொடர்ந்து
புன்னகைத்தபடி
வருவதில்லை நீ வாசல்வரை
முன்பு போல

கட்டிலிலே சாய்ந்து
என்னையும் தாண்டி
கதவினூடாகப் பார்த்திருக்கிறாய்
தொலைதூரத்தை

அமைதியாக
பறக்கிறது பட்டம்
மிகத் தொலைவான உயரத்தில்
நூலிருக்கும் வரை

தெரியும் உனக்கும்
என்னை விடவும் நன்றாக

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் – எம்.ரிஷான் மேலும்படிக்க

No comments:

Post a Comment