google1

Wednesday, November 30, 2011

கைப்பேசி பேசினால்..........!! - ”கவியன்பன்” கலாம்

நான் செய்த புரட்சிகள்:
 
தத்திச் சென்ற
தந்தியை வென்றேன்
 
குறுஞ்செய்தியால்
குவலயம் ஆள்கின்றேன்
 
ஆறாம் விரலாய்
ஆட்கொண்டே
ஆட்டுவிக்கின்றேன்
 
கைக்குள் அடக்கமாய்
ஹைக்கூ கவிதையாய்
"நச்"சென்று பேச வைத்தேன்
 
ஏபிசிடி தெரியாமலே
ஏடேதும் படிக்காமலே
மிஸ்டு கால்
மெஸேஜ் எல்லாம்
புரிய வைத்தேன்
 
ஆடம்பரமாய்
ஆரம்பமானேன்
தேவைக்குரியோனாய்த்
தேர்ந்தெடுக்கப்பட்டேன்
 
உயர்ந்த விலையில்
உடலாம் எனக்கு
குறைந்த விலையில்
உயிராம் "சிம்" அதற்கு
 
பல்லுப் போனால்
சொல்லுப் போச்சு
சில்லு(சிம்)ப் போனால்
செல்லுப் போச்சு
 
கையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment