google1
Wednesday, July 31, 2013
பிரார்த்தனை (கவிதை)
Kalam Kader
மனக்குளத்தில் தூசிகளாய்
.....மடிந்திருக்கும் வேளையிலே
கனக்குமந்தப் பாவமெலாம்
.....கழுவுகின்ற மாதமன்றோ?
உள்ளமென்னும் மணற்பரப்பில்
.....உலர்ந்துநிற்கும் குணச்செடிக்கு
வெள்ளமென்னும் அருளருவி
.....விழுந்திடவே இறைஞ்சுகிறேன்!
பொய்யொழித்துப் புறந்தள்ளிப்
.....பொல்லாங்குப் பேசாமல்
மெய்யடக்கி இருப்பதுதான்
.....மெய்யான நோன்பாகும்!
ஆயிரம் திங்களினும்
…ஆங்கோர் இரவினையே
பாயுமுன் ஆற்றலாகப்
…பாய்ச்சும் இறைவனேநீ!
எரிகின்ற நரகமின்றி
.....எம்மையும் விடுப்பாயா?
சொரிகின்ற அருளதனால்
சொர்க்கமும் தருவாயா?
பசிவந்தால் குணம்பத்தும்
.....பறந்திடுமாம் அத்தருணம்
பசிவந்தும் பக்குவத்தால்
.....பிறந்திடுமாம் மேலும்படிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment