தீபாவளி தட்டுகிறது
கதவுகளே
திறந்து கொள்ளுங்கள்!
சரவெடி எழுப்புது
இமைகளே
விழித்துக் கொள்ளுங்கள் !
சில்லென்ற நீரும்
எண்ணெய் தலையும்
சிரிக்கிறதே
உடல் நடுக்கத்தைப் பார்த்து
சமையல் அறையும்
சமைக்கின்ற கைகளும்
ஓய்வின்றி
இயங்கிடுதே காலையில்
கோவில் மணி
இசைத்திட
கலர் கலர் ஆடையில்
கூடிடும் கூட்டத்தில்
நீ எங்கே சகியே!
மேலும்படிக்க
No comments:
Post a Comment