google1

Wednesday, November 30, 2011

வாழ்க்கை இது - ஜெயஸ்ரீ ஷங்கர்

வாழ்க்கை  இது - ஜெயஸ்ரீ ஷங்கர்எனக்குள் நான்...
வெறுமையாய்..
பிரிந்து
சென்றிருக்கக் கூடாது...
தவிப்பின் துயர்
உணர வைத்தது
உன் பிரிவு தான்...!

எனக்குள் நான்
பொறுமையாய்...
காத்து நின்றிருந்தேன்..
என்றாவது உன்
பார்வை என் மீது
திரும்பும்
என்ற நம்பிக்கையில்..
காத்தலின் பெருமையை
உணர்த்தியவள் நீ..!

நான் நினைத்த எதுவும்
நடக்க வில்லை.
இதுவரை..
பொறுமையும்..
வெறுமையும்..
தனிமையும்...போனதெங்கே...?
இதோ....
எங்கிருந்தோ வந்த
தென்றல்
நாற்றைப் பிடுங்கிப்
சேற்றில் புதைத்த போது..
புரிந்தது.....
வாழ்க்கை இது என்று..!

- மேலும்படிக்க

No comments:

Post a Comment