பட்டுச் சிறகை விரித்து
படபடக்கும் பட்டாம்பூச்சி
பறக்கும் வழியெங்கும்
பதபதைப்போடு தேடுவதை
பார்த்தபடி நின்றேன்
கண்ணெதிரே பறந்த பட்டாம்பூச்சி
களைத்து கிளையில்
என்னெதிரில் அமர்கையில்
கைவிரல் தொட்டு மெல்ல வருடி
கண்ஜாடையில் கேட்டேன்
எதை தொலைத்து தேடுகிறாயென!
களைத்த போதிலும்
சலைக்காமல் சொன்னது
மனிதமுள்ள மனதையும்
மனநோய்யில்லா மனிதரையும்-இம்
மண்ணில் தேடுகிறேனென்று!
வருடிய மேலும்படிக்க
No comments:
Post a Comment