google1

Tuesday, March 22, 2011

ஹைக்கூ - இரா .இரவி

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி

விமர்சனங்களுக்கு
செவி மடுக்கவில்லை
தவளை

இராமாயண மாற்றம்
கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்

மலர்களோடு பேசினேன்
அவளின் தாமதத்திற்கு
நன்றி

பாராட்டினார்கள்
சிலையையும் சிற்பியையும்
சோகத்தில் உளி

ஏங்கியது குழந்தை
கதை கேட்க
முதியோர் இல்லத்தில் பாட்டி


பொருத்தமாக இல்லை
எயிட்ஸ் விளம்பரத்தில்
நடிகர்

கூவலின் இனிமை
இனப்பெருக்கத்தில் இல்லை
குயில்

திருந்தாத மக்கள்( மாக்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment